பொது இடங்களில் மது அருந்த தடை.? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!
டாஸ்மாக் மூடிய பிறகு பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
டாஸ்மாக் மதுபான கடை மூடிய பிறகும் பலர் பொது இடங்களில் மது அருந்தி வருகின்றனர். இதனால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில்,டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் பொதுவெளியில் மது அருந்துவோரை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .