உயர்நீதிமன்றம் உத்தரவு.! மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்.!
- உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புகார் விடுத்தனர்.
- மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் ஒன்று விடுத்தனர். இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்த திமுகவினர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இரவிலும் தொடர்வதால், கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் இதனைத் தொடர்ந்து ஆஜரான மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சுந்தரேசன், மின்னணு இயந்திரங்கள் இல்லாமல் வாக்குச் சீட்டு முறையில் எண்ணப்படுவதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் எனவும், வாக்கு எண்ணிக்கை நிறைவடையாத நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு தேவையற்றது எனவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்குள் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.