#BREAKING: பாஜக பிரமுகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..!
சமூக வலைத்தளங்களில் சர்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக கோபிநாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கல்யாணராமனை கைது செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கல்யாணராமன் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கல்யாணராமனின் மனுவை விசாரித்தபோது அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? என்று நீதிபதி கேட்டனர். மேலும், கல்யாணராமன் நீதிமன்றம், சட்டம் மற்றும் போலீசாரை மதிக்கமாட்டாரா..? என கேள்வி எழுப்பி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
கல்யாணராமன் மனு மீது சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், கல்யாணராமன் வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.