10-ம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது- உயர்நீதிமன்றம்.!

10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் ரத்து செய்யகோரிய தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
10-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 10-ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
அரசியல் அரசியல் மற்றும் பல தரப்பினர் கொரோனா தமிழகம் முழுவதும் பரவி உள்ளபோது தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதுடன் அனைத்து மக்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, அதை பதிவு செய்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யகோரிய தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025