போகர் ஜெயந்தி விழா நடத்த உயர்நீதிமன்ற கிளை அனுமதி!
பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி.
பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. போகர் ஜெயந்தியின் போது மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு வழக்கம்போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புலிப்பாணி பாத்திர சாமி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழா நடத்தலாம்.
புலிப்பாணி பாத்திரசாமி சார்பில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதித்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம் கிளை. பழனி சிவானந்த புலிப்பாணி சுவாமி, சிவசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், பழனி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.