திமுக தலைமையில் நடக்க இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

கோயம்புத்தூரில் சொத்துவரி அதிகமாக்கபட்டதன் காரணமாக, கோவை மாநகராட்சியை எதிர்த்து திமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.
ஆனால், இந்த திமுக தலைமையில் நடத்த இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தற்போது உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
திமுக கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக செய்தி அறிந்ததும் உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக பொதுநலவழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில், முழு கடையடைப்பு கோயம்புத்தூரில் நடைபெற்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டுதான் திமுக தலைமையில் நடத்த இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராடுவது சட்ட விரோதம் எனவும், உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் ஷேசசாயி ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025