14 வயது சிறுமியின் 24 வார கால கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அதில் சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து , இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது உறவுக்காரர் இளைஞர் ஒருவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞன் மீது செங்கல், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமி கர்ப்பத்தை தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கருகலைப்பு சட்டக்குழு அறிக்கை அளித்தது.
இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை தனது மகள் படிப்பை தொடர விரும்புவதாகவும், தற்போது நிலையில் கர்ப்பத்தை சுமக்க விரும்பவில்லை என்றும், மகளிர் 24 வாரக் கல்லறை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற கருக்கலைப்பு சட்டக் குழு அளித்த அறிக்கை ஏற்றுக் கொண்டு, அந்த சிறுமிக்கு இரண்டு வாரங்களில் கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்துள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…