சென்னையில் அடுத்த 48 மணி நேரம் நிலவரம் இதோ …வெளியான அப்டேட்!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப நிலை 24 டிகிரி முதல் 25 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்க கூடும் என தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட பல மாவட்டங்களில கனமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரம் எப்படி இருக்கும் என்பதற்கான நிலவரத்தை வானிலை ஆய்வு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன அல்லது மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலையின் அளவு 24-25′ செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யும் எனவும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெப்பநிலை 24 டிகிரி முதல் 25 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழக அரசு பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும், காரணம் இன்றி பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2024