டூவிலரில் ஹெல்மெட் அணிந்து சும்மா கூலா கெத்தா செல்லும் நாய்..வைரலாகும் வீடியோ இதோ.!

Default Image
  • தமிழகத்தில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, போக்குவரத்துக்கு போலீசார் அறிவித்தனர்.
  • அந்த வகையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தனது செல்ல நாயை அமரவைத்து, அதற்கும் ஒரு தலைக்கவசத்தை அணிவித்து அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் அதிகம் விபத்துகள் நடைபெறுகிறது. அதுபோன்று குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, அளவுக்கு மீறி அதிக லோடு ஏற்றி செல்வது, உள்ளிட்ட விதிமீறல்களில் பெரிய அளவில் விபத்து ஏற்படுவதால் அண்மையில் போக்குவரத்து போலீசார், அதில் அதிக கவனம் செலுத்தாமல், தலைக்கவச அணியாமல் செல்பவர்கள் லைசன்ஸ் ரத்து செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பின்னர் வாகனத்தில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, திடீர் கவனம் செலுத்தி வசூல் வேட்டை நடத்துவதாக பரவலான புகார் எழுந்தது.

அந்த வகையில் நேற்று சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த விதியால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் தனது செல்ல நாயை அமரவைத்து, அதற்கும் ஒரு ஹெல்மெட்டை அணிவித்து அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை சாலையில் செல்லுபவர்களை வெகுவாக கவர்ந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்