11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை., முழு விவரம் இதோ..,
11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் 2025, மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15இல் முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் கொண்ட அட்டவணையை அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
அதில், 11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15, 2025இல் தொடங்கி, பிப்ரவரி 21, 2025இல் முடிவடையும் என்றும், எழுத்துத் தேர்வுகள் மார்ச் 5, 2025இல் தொடங்கி மார்ச் 27, 2025இல் முடிவடையும் என்றும் இதற்கான தேர்வு முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும். என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :
மார்ச் 5, 2025 (புதன்) : தமிழ் / மொழிப்பாடம்.
மார்ச் 10, 2025 (திங்கள்) : ஆங்கிலம்.
மார்ச் 13, 2025 (வியாழன்) :
கணினி அறிவியல், உயிர் வேதியியல், கணினி பயன்பாடுகள், தகவல்தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், மேம்பட்ட மொழிப்படம் (தமிழ்), Home Science, அரசியல் அறிவியல், நர்சிங், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்,
மார்ச் 17, 2025 (வெள்ளி) :
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை இயந்திரவியல், தொழில்நுட்பவியல்.
மார்ச் 20, 2025 (வியாழன்) :
இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள்.
மார்ச் 24, 2025 (வெள்ளி) :
கணிதம், விலங்கியல், வணிகம், நுண்ணுறியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள், துணிகள் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது)
மார்ச் 24, 2025 (செய்வ்வாய்) :
வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
நேர அட்டவணை :
- காலை 10.00 மணி முதல் 10.10 வரை – வினாத்தாள் சரிபார்ப்பு.
- காலை 10.10 மணி முதல் 10.15 வரை – மாணவர்களின் சுயவிவரங்கள் சரிபார்ப்பு.
- காலை 10.15 முதல் பகல் 1.15 வரை – எழுத்துத் தேர்வு.