10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை., முழு விவரம் இதோ..,

10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் 2025, மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15இல் முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தி வெளியிட்டுள்ளார்.

10th Exam Time table

சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

அதில், 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையின் படி, செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 28, 2025-ல் முடிவடையும் என்றும், எழுத்து தேர்வுகள் மார்ச் 28, 2025இல் தொடங்கி ஏப்ரல் 15, 2025இல் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :

  • மார்ச் 28, 2025 (வெள்ளி) : தமிழ் / மொழிப்பாடம்.
  • ஏப்ரல் 2, 2025 (புதன்) : ஆங்கிலம். 
  • ஏப்ரல் 4, 2025 (வெள்ளி) : விருப்ப மொழிப்பாடம். 
  • ஏப்ரல் 7, 2025 (திங்கள்) : கணிதம். 
  • ஏப்ரல் 11, 2025 (வெள்ளி) : அறிவியல். 
  • ஏப்ரல் 15, 2025 (செய்வாய்) : சமூக அறிவியல்.  

நேர அட்டவணை :

  • காலை 10.00 மணி முதல் 10.10 வரை – வினாத்தாள் சரிபார்ப்பு.
  • காலை 10.10 மணி முதல் 10.15 வரை – மாணவர்களின் சுயவிவரங்கள் சரிபார்ப்பு.
  • காலை 10.15 முதல் பகல் 1.15 வரை – எழுத்துத் தேர்வு.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்