‘அடுத்த களப்பலி அதிமுக’ -பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து காலியான கட்சிகளின் பட்டியல் இதோ! – ஜோதிமணி எம்.பி
பாஜக கூட்டணி கட்சிகளை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் அவ்வப்போது, பாஜக மற்றும் மத்திய அரசை விமர்சித்து சமூகவலைதளப்பக்கத்தில் கருத்து பதிவிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது பாஜக கூட்டணி கட்சிகளை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து காலியான கட்சிகளின் பட்டியல் இதோ!காஷ்மீர்-பிடிபி, அஸ்ஸாம்-ஏஜிபி,பீகார்- ஜேடியு,கர்நாடகா-ஜேடி எஸ் இன்னும் பல்வேறு மாநிலங்களில் சிறிய கட்சிகள். சிவசேனா, ஜேஎம்எம்(ஜார்கண்ட்) இரண்டும் பாஜகவிடமிருந்து தப்பி, மயிரிழையில் உயிர் பிழைத்தன. அடுத்த களப்பலி அதிமுக!’ என பதிவிட்டுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து காலியான கட்சிகளின் பட்டியல் இதோ!காஷ்மீர்-பிடிபி, அஸ்ஸாம்-ஏஜிபி,பீகார்- ஜேடியு,கர்நாடகா-ஜேடி எஸ் இன்னும் பல்வேறு மாநிலங்களில் சிறிய கட்சிகள்.
சிவசேனா, ஜேஎம்எம்(ஜார்கண்ட்) இரண்டும் பாஜகவிடமிருந்து தப்பி, மயிரிழையில் உயிர் பிழைத்தன.அடுத்த களப்பலி அதிமுக!— Jothimani (@jothims) February 23, 2022