கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுக்கிற மரியாதையை உலகறியும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் MP ஜோதிமணி அவர்கள் திமுக அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் MP திரு சின்ராஜ் அவர்கள் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த திமுக அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அக்கறைக்கு நன்றி திரு.அண்ணாமலை. எங்கள் கூட்டணியின் தலைவர்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது எப்போதும் அன்பும்,மரியாதையும், கரிசனமும் உள்ளவர். இதை சமீபத்தில் கரூரில் நடந்த அரசுவிழாவில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவே எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத்தேவையில்லை.
கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுக்கிற மரியாதையை உலகறியும். இதோ மரியாதையோடு நீங்கள் ஒழித்துக்கட்டிய உங்கள் கூட்டணி கட்சிகளின் பட்டியல். PDP,JDU, JDS, INLD, AGP,BSP etc இந்த பட்டியலில் இப்போது சிவசேனாவும்,அதிமுகவும்! நீங்களெல்லாம் கூட்டணி பற்றிப் பேசலாமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…