பாஜக மரியாதையோடு ஒழித்துக்கட்டிய கூட்டணி கட்சிகளின் பட்டியல் இதோ – ஜோதிமணி எம்.பி

Default Image

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுக்கிற மரியாதையை உலகறியும் என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் MP ஜோதிமணி அவர்கள் திமுக அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் MP திரு சின்ராஜ் அவர்கள் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த திமுக அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அக்கறைக்கு நன்றி திரு.அண்ணாமலை. எங்கள் கூட்டணியின் தலைவர்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது எப்போதும் அன்பும்,மரியாதையும், கரிசனமும் உள்ளவர். இதை சமீபத்தில் கரூரில் நடந்த அரசுவிழாவில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவே எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத்தேவையில்லை.

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுக்கிற மரியாதையை உலகறியும். இதோ மரியாதையோடு நீங்கள் ஒழித்துக்கட்டிய உங்கள் கூட்டணி கட்சிகளின் பட்டியல். PDP,JDU, JDS, INLD, AGP,BSP etc இந்த பட்டியலில் இப்போது சிவசேனாவும்,அதிமுகவும்! நீங்களெல்லாம் கூட்டணி பற்றிப் பேசலாமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்