தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குகான விடுமுறை விவரம் இதோ !
தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை,நாகை ,மயிலாடுதுறை,திருவாரூர்,ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி,பூவிருந்தமல்லி,திருவள்ளூர்,பொன்னேரி ஆகிய தாலுக்காவில் மட்டும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (நவ 4) மற்றும் நாளை (நவ 5 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.