தமிழகத்திற்க்கான 5 மீடியாக்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முழு விபரம் இதோ..!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் அமமுக சார்பில் டி.டி.வி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் , டுடே சாணக்யா , இந்தியா ஹெட் மற்றும் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:
- திமுக: 160-172
- அதிமுக: 58-70
- அமமுக: 0-4
- மக்கள் நீதி மய்யம்: –
- நாம் தமிழர்: –
ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு:
- திமுக: 160-170
- அதிமுக: 58-68
- அமமுக: 4-6
- மக்கள் நீதி மய்யம்: 0-2
- நாம் தமிழர்: –
டுடே சாணக்யா கருத்துக்கணிப்பு:
- திமுக: 164-186
- அதிமுக: 48-68
- அமமுக: –
- மக்கள் நீதி மய்யம்: –
- மற்றவை: –
இந்தியா ஹெட் கருத்துக்கணிப்பு:
- திமுக: 165-190
- அதிமுக: 40-65
- அமமுக: 1-3
- மக்கள் நீதி மய்யம்: 1-3
- மற்றவை:
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு:
- திமுக: 175-195
- அதிமுக: 38-54
- அமமுக: 1-2
- மக்கள் நீதி மய்யம்: 0-2
- மற்றவை: –
இந்த 5 மீடியாக்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.