மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..! முழு விவரம் இதோ…

25 IAS officers trans

சென்னை : தமிழ்நாட்டில் மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பொறுப்பு புதியதாக உருவாக்கப்பட்டு, அந்த பொறுப்பிற்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனை தொடர்ந்து, மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, இன்று ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

25 புதிய மாவட்ட ஆட்சியர்கள் விவரங்கள்…

  1. ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  3. முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  4. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  5. நெல்லை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  6. இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  7. அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  8. புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  9. கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  10. ஆவின் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநராக பொற்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  11. வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராக மோகன சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  12. நாகை ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  13. போக்குவரத்து துறை ஆணையராக ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  14. கன்னியாகுமரி ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அறிக்கையை பார்க்கவும்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)