தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
தமிழகம்:
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது.இதில் பதிவான வாக்கு சதவீதம் 71.79% ஆகும் .
இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் தகுதிபெற்றிருந்தனர்.
கேரளா:
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது.இதில் பதிவான வாக்கு சதவீதம் 70.04% ஆகும். கேரளாவில் மொத்தம் 2.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 78.13% ஆகும்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. புதன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம்:
அசாம் மாநிலத்தில் மொத்தமாக 126 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக கடந்த 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள 40 தொகுதிகளுக்கு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.அஸ்ஸாமில் (3வது மற்றும் இறுதி கட்டம்) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 82.29% ஆகும்.
மேற்கு வங்கம்:
மேற்குவங்கத்தில் மொத்தமாக 294 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 31 தொகுதிகளுக்கான 3வது கட்டம் நடைபெற்றது.இதில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 77.68% ஆகும்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…