பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் இதோ பட்டியல்..!

Default Image

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் கொரோனா தொற்றுநோய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இந்த மத்திய பட்ஜெட் தாக்கலில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு பற்றி பார்க்கலாம்.

புதிய சாலை திட்டங்கள்:

தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய சாலை திட்டங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சாலை திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்ட  உள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மதுரையில் இருந்து கொல்லம் வரை பொருளாதார சாலை அமைக்கப்படும். பொருளாதார சாலைக்கான கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்:

சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும், கொச்சி மெட்ரோ ரெயில் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுகங்கள்:

சென்னை , கொச்சி , விசாகப்பட்டினம் , பிரதீப் மற்றும் பெட்டுகாட் உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பாசி:

தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார்.

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை:

சென்னை -சேலம் எட்டு வழி சாலைக்காக பணிகள் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 277 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கான டெண்டர் இந்த ஆண்டு இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்