இந்தியா முழுவதும் நேற்று நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இதோ ..!

Published by
லீனா

இந்தியா முழுவதும் நேற்று நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் 

நேற்று தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் , மஹாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் காலியாக 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாடு 

2021-ஆம் ஆண்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஜன.4-ஆம் தேதி, திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவேராவின் தந்தை, ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த பிப்.27 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தின் பா.ஜ.,வை சேர்ந்த ஜம்பே தஷி காலமானார். இவரது மறைவை தொடர்ந்து, லும்லா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஷெரிங் லாமு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு ஏஜேஎஸ்யுபி வேட்பாளர் சுனிதா சவுத்ரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பஜ்ரங் மஹட்டோவை 21,970 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மஹாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கஸ்பாபேத் மற்றும் சின்ச்வாடு தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கஸ்பாபெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாங்கேகர் ரவீந்திர ஹேமராஜ் 10 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 28 ஆண்டுகளாக பா.ஜ.,வசம் இருந்த கஸ்பாபெத் தொகுதி, தற்போது காங்கிரஸ் வசமானது. சின்ச்வாடு  தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வினி லட்சுமன் ஜெகதீப் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்கம் 

மேற்கு வங்காளத்தில் சாகர்டிகி சட்டசபை தொகுதியில், திரிணமுல் கட்சி எம்.எல்.ஏ மறைவை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில்,  காங்கிரஸ் வேட்பாளர் தேபாஷிஷ் பானார்ஜி. வெற்றி பெற்றார்.

Published by
லீனா

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

18 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

23 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

33 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

1 hour ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago