இந்தியா முழுவதும் நேற்று நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இதோ ..!
இந்தியா முழுவதும் நேற்று நடந்த இடைத்தேர்தல் முடிவுகள்
நேற்று தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் , மஹாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் காலியாக 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு
2021-ஆம் ஆண்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஜன.4-ஆம் தேதி, திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவேராவின் தந்தை, ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த பிப்.27 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்தின் பா.ஜ.,வை சேர்ந்த ஜம்பே தஷி காலமானார். இவரது மறைவை தொடர்ந்து, லும்லா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஷெரிங் லாமு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு ஏஜேஎஸ்யுபி வேட்பாளர் சுனிதா சவுத்ரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பஜ்ரங் மஹட்டோவை 21,970 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மஹாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கஸ்பாபேத் மற்றும் சின்ச்வாடு தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கஸ்பாபெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாங்கேகர் ரவீந்திர ஹேமராஜ் 10 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 28 ஆண்டுகளாக பா.ஜ.,வசம் இருந்த கஸ்பாபெத் தொகுதி, தற்போது காங்கிரஸ் வசமானது. சின்ச்வாடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வினி லட்சுமன் ஜெகதீப் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்காளத்தில் சாகர்டிகி சட்டசபை தொகுதியில், திரிணமுல் கட்சி எம்.எல்.ஏ மறைவை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் தேபாஷிஷ் பானார்ஜி. வெற்றி பெற்றார்.