இனிமேல் இந்த வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.1000 அபராதம் – தமிழக அரசு
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்வோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
பொதுவாகவே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவை அவசரமாக செல்லும் போது, முன் செல்லும் வாகன ஓட்டிகளும், எதிரே வரும் வாகன ஓட்டிகளும் வழி விட்டு செல்வதுதான் வழக்கம்.
ஆனால் இதிலும் சிலர் வழி விடாமல் செல்வதுண்டு. இதனால் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிரமப்படுவதுண்டு.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்வோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.