அனைத்து வருவாய்த்துறை சான்றிதழ்களும் ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை
தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று 2023-24ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார்.
அதில் தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் , அனைத்து சான்றிதழ்கள், உரிமங்கள், ஆவணங்களை இணையவழியாகப் பெறும் வகையில் வருவாய் நிர்வாகம் முழுவதுமாக கணினிமயமாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டுவருகிறது. எனவே இனி வரும் காலங்களில் இதர சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என வருவாய்த்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…