சர்காரின் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்…!தினகரன் பரபரப்பு தகவல்
எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தனது ஆதரவாளர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையாவுடன் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைக்கு சசிகலாவை சென்றார்.அங்கு தினகரன் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.அதன் பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,சர்கார் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது. பிரச்சினைகளை திசை திருப்பவே ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை, இப்படத்தில் இலவச தொலைக்காட்சியையும் எரித்து இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம்.எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர்.போயஸ் தோட்ட வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை ?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.அதேபோல் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரிதான், இடைத்தேர்தலை சந்திப்பது சரி என சசிகலா கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.