சென்னையில் இரவு நேர ரோந்து பனியின் போது பிரசவ வலியால் துடித்த கர்பிணி பெண்ணுக்கு உதவிய காவல்துறை ஆய்வாளரான ராஜேஸ்வரிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அயனாவரம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியான இவர் தன் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று இரவு ஷீலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்களை தேடி கே.ஹெச் சாலையில் நின்று இருக்கிறார். அப்போது அந்த வழியில் ரோந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சாலையில் அந்த பெண் நிற்பதை கண்டு விசாரித்துள்ளார். காவலரிடம் அந்த பெண்மணி விஷயத்தை கூறவும் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
உடனடியாக, 108 க்கு தகவல் தெரிவித்து வர ஏற்பாடு செய்துள்ளார். 108 வாகனம் வர தாமதம் ஆனதால் காவல்துறை வாகனத்திலே பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஏற்றிஉள்ளனர். புறப்பட்ட போது எதிரில் வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண்ணுக்கு இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
பெண்ணின் பிரசவத்திற்கு உதவி செய்த அந்த காவல் ஆய்வாளருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…