பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் – இரவில் உதவிய பெண் காவல் ஆய்வாளர் !

Default Image

சென்னையில் இரவு நேர ரோந்து பனியின் போது பிரசவ வலியால் துடித்த கர்பிணி பெண்ணுக்கு உதவிய காவல்துறை ஆய்வாளரான ராஜேஸ்வரிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அயனாவரம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியான இவர் தன் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று இரவு ஷீலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்களை தேடி கே.ஹெச் சாலையில் நின்று இருக்கிறார். அப்போது அந்த வழியில் ரோந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சாலையில் அந்த பெண் நிற்பதை கண்டு விசாரித்துள்ளார்.  காவலரிடம் அந்த பெண்மணி விஷயத்தை கூறவும் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

உடனடியாக, 108 க்கு தகவல் தெரிவித்து வர ஏற்பாடு செய்துள்ளார். 108 வாகனம் வர தாமதம் ஆனதால் காவல்துறை வாகனத்திலே பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஏற்றிஉள்ளனர். புறப்பட்ட போது எதிரில் வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண்ணுக்கு இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண்ணின் பிரசவத்திற்கு உதவி செய்த அந்த காவல் ஆய்வாளருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்