மொழி வளர கைகொடுங்கள் என்று தமிழக அரசிற்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் மூன்றரை லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்கு தமிழர்களுக்கும், தமிழுக்கும் பலவித முன்னுரிமைகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக அறிவித்து கனடா மக்கள் அதை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ளார்.
கனடாவில் முதல் இடத்தில் உள்ள டோரண்டோ பல்கலைக் கழகம் கடந்த பல வருடங்களாக தமிழ் மரபை கொண்டாடி வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி வேகமாக முன்னேறியிருக்கிறது. இதற்குத் தேவையான வைப்பு நிதி 3 மில்லியன் டாலர்கள். அங்கேயுள்ள தமிழ் மக்கள் ஏற்கனவே 2.44 மில்லியன் டாலர்கள் திரட்டிவிட்டார்கள்.
இன்னும் தேவை 5,60,000 டாலர்கள் மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.2 கோடி மட்டுமே. ஹார்வர்டுக்கு பத்துக் கோடி வழங்கிய தமிழக அரசு இந்தப் பெரு முயற்சிக்குத் தேவைப்படும் மீதி நிதியை கொடையாக வழங்க வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ளார்.
193 வருடங்கள் பாரம்பரியம் மிக்க டோரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கை, தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் நிலைநாட்டுவதோடு, உலகின் பல்வேறு தமிழ் ஆய்வுகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இதற்கு கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…