மொழி வளர கைகொடுங்கள்., தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த கமல்ஹாசன்.!

Default Image

மொழி வளர கைகொடுங்கள் என்று தமிழக அரசிற்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் மூன்றரை லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்கு  தமிழர்களுக்கும், தமிழுக்கும் பலவித முன்னுரிமைகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக அறிவித்து கனடா மக்கள் அதை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ளார்.

கனடாவில் முதல் இடத்தில் உள்ள டோரண்டோ பல்கலைக் கழகம் கடந்த பல வருடங்களாக தமிழ் மரபை கொண்டாடி வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி வேகமாக முன்னேறியிருக்கிறது. இதற்குத் தேவையான வைப்பு நிதி 3 மில்லியன் டாலர்கள். அங்கேயுள்ள தமிழ் மக்கள் ஏற்கனவே 2.44 மில்லியன் டாலர்கள் திரட்டிவிட்டார்கள்.

இன்னும் தேவை 5,60,000 டாலர்கள் மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.2 கோடி மட்டுமே. ஹார்வர்டுக்கு பத்துக் கோடி வழங்கிய தமிழக அரசு இந்தப் பெரு முயற்சிக்குத் தேவைப்படும் மீதி நிதியை கொடையாக வழங்க வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ளார்.

193 வருடங்கள் பாரம்பரியம் மிக்க டோரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கை, தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் நிலைநாட்டுவதோடு, உலகின் பல்வேறு தமிழ் ஆய்வுகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இதற்கு கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்