வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்சில் 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தோளில் கருப்பு துணி அணிந்து வந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உடலுக்கு மலர்வளையம் வைத்து, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.
அதே சமயம்,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,விபத்து குறித்து இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.இதில் வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து,இன்று மாலை சூலூர் சென்றடைந்த பின்னர்,முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.மேலும்,அவர்களது உடல் நாளை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு,முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…