#HelicopterCrash:”இந்தியா தனது துணிச்சலான மகனை இழந்துள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!

Default Image

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிஹாப்டர் புறப்பட்டது.

ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்தது.இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து,ராணுவ ஹெலிஹாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்,குடியரசுத்தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் உட்பட தலைவர்கள் மக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆளுநர் கூறியிருப்பதாவது:

“நீலகிரி மாவட்டம்,குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத், அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்களின் துரதிர்ஷ்டவசமான மறைவு குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

ஜெனரல் பிபின் லக்ஷ்மண் ராவத், இந்திய ராணுவத்தின் நான்கு நட்சத்திர ஜெனரல் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரி  ஆவார்.26 வது ராணுவ தளபதியாக பணியாற்றினார் மற்றும் தேசத்திற்கு தனது 43 வருட அர்ப்பணிப்பு சேவையை வழங்கினார். அவரது பாதுகாப்பு உத்திகள் மற்றும் அவரது சிறந்த தொழில்முறை புத்திசாலித்தனம் ஆகியவை சமீபத்திய காலங்களில் வெளிப்புற ஆக்கிரமிப்புகளை சமாளிக்க இந்தியாவுக்கு உதவியது. அவரது திறமையான தலைமை, பரந்த அனுபவம் மற்றும் புதுமையான யோசனைகள் பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்க உதவியது. அவர் நமது மூன்று பாதுகாப்புப் படைகளையும் ஒருங்கிணைத்து, உள்நாட்டிலும் வெளியிலும் உள்ள சவால்களைச் சந்திக்க அவற்றைப் பலப்படுத்தினார். அவரது மறைவு இந்தியாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்தியா தனது துணிச்சலான மகனை இழந்துள்ளது.

ஜெனரல் பிபின் ராவத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்