#HelicopterCrash:சிதைந்த உடல்களை அடையாளம் கண்டது எப்படி – வெளியான புதிய தகவல்!
நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிதைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இறந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு நேற்று சென்ற எம்ஐ-17 என்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது.
இதனையடுத்து,சம்பவ இடத்தில் 9 பேரின் உடல்கள் எரிந்த நிலையிலும்,4 பேர் சிதைந்த நிலையில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.ஆனால்,அதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நான்கு பேரில் மூவர் உயிரிழந்தனர்.அதன்படி,இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும்,உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்,விபத்தில் சிதைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இறந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்களின் எலும்புகளை வைத்து ஆண் மற்றும் பெண் என உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக எலும்பு மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.