நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது.
ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது.இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து,ஹெலிகாபடர் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விமானப்படை சார்பில் நேற்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில்,விபத்து நடந்த காட்டேரி வனப்பகுதியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விமானப்படை ஹெலிகாப்டர் பாகங்கள் ஏற்கனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,தற்போது விமானப்படை தளபதி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.அவருடன் இணைந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…