கொடைக்கானலின் மேற்புற தோற்றத்தை கண்டு ரசிக்க ஹெல்காப்டர் சேவை.!

கொடைக்கானலின் மேற்புற தோற்றத்தை கண்டு ரசிக்க தற்காலிக ஹெல்காப்டர் சேவையை தொடங்கவுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் முழு அழகை ரசிப்பதற்காக தற்காலிக ஹெலிகாப்டர் சேவையை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.
கோயம்புத்தூரில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களால் நடத்தி வரும் இந்நிறுவனம் தொடங்கும் ஹெலிகாப்டர் சேவை மூலம் ஏரி,கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட கொடைக்கானலின் மொத்த மேற்புற தோற்றத்தை ஹெலிகாப்டரில் 15 நிமிடங்கள் பறந்தவாறு கண்டு களிக்கலாம்.
மேலும், இதனை அவசர கால மருத்துவ சேவைக்கும் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 3ம் தேதி முதல் தொடங்கப்படும் இந்த சேவை மூலம் ஒருவருக்கு ரூ.6000 கட்டணம் என்ற வீதம் ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்யலாம் .
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025