#Helicopter Crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.
இன்று காலை 11:47 க்கு சூலூரில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் பகல் 12.20 மணிக்கு விபத்துக்குள்ளானது. தரையிறங்க வேண்டிய வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டருக்கும் முன்புதான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கி 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விழுந்த உடனே அருகில் செல்ல முடியாத அளவுக்கு தீப்பற்றி விமானம் எரிந்தது. விமானம் பெட்ரோல் காரணமாக தொடர்ந்து தீ எரிந்து கொண்டே உள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் 10 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது.
இதுவரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு செல்கிறார். ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.