ஹெலிகாப்டர் விபத்து – கோவை விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்து நடந்த குன்னூர் பகுதிக்கு சென்று மீட்புப்பணி மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்கிறார்.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து, இந்த விபத்தில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேரின உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்துள்ளனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி இருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கோவை விமானம் நிலையம் செல்கிறார். பின் விமான நிலையத்தில் இருந்து சாலைமார்க்கமாக, விபத்து நடந்த குன்னூர் பகுதிக்கு சென்று மீட்புப்பணி மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்கிறார்.