ஆரோக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது – காங். எம்எல்ஏ விஜயதாரணி
திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். இன்று மாலை இந்த கூட்டம் மிகவும் பிரமாண்டமாக நடையபிறவுள்ளது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை விமான நிலையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அரசியல் ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது..! – கனிமொழி எம்.பி
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தங்கியுள்ளனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து காங். எம்எல்ஏ விஜயதாரணி அவர்கள் கூறுகையில், ஆரோக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த வளர்ச்சி கட்டத்தை, எட்டக்கூடியதாக இந்த கூட்டம் அமைந்திருந்தது. கட்சியின் அடுத்த கட்ட நகர்வு உள்ளிட்டவை குறித்து பேசபட்டது.
அரசியலில் மகளிர் அதிகமான பங்களிப்பு உள்ளிட்டவை குறித்த ஆலோசனை அனைத்தும் பேசப்பட்டது. கூட்டணி பொறுத்தவரை ஆழமான கருத்துடன் இருக்கிறார்கள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஜனவரி மாதம் தான் பேசப்படும் என தெரிவித்துள்ளார்.