#HeavyRains: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, 4 ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
அந்த வகையில், கோவை, சிவகங்கை, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை மற்றும் தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, திருப்பூரில் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதே நேரத்தில், சென்னையின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.