தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி , மிதமான மழை பெய்து வருகிறது.நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது.இன்றும் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.