டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த டவ்-தே புயல் வருகின்ற 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கவுள்ளது.
இந்நிலையில் டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் டவ்-தே புயல் கர்நாடகா கரையோரத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக 150 – 160 கீ.மீ வேகத்தில் கற்றுவீசக்கூடும் என்றும், புயலின் தாக்கம் தமிழகம், மகாராஷ்ரம், கேரளா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…