விமான சேவை : சென்னையில் சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணியளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது.
இதனால், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சோழிங்கநல்லூர் என நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், நேற்று இரவில் சென்னைக்கு வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன, 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மேலும், கோழிக்கோட்டில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கும், டெல்லியில் இருந்த வந்த விமானம் பெங்களூருக்கும் திருப்பி விடப்பட்டன.
கொல்கத்தா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு…
சிவகங்கை : தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவும், பல்வேறு நல திட்டங்களை தொடங்கி…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் செந்தில் பாலாஜியை…
சென்னை : நேற்று (ஜனவரி 21, 2025) அன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.59,600 ஆக…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில், பெரியார்…