தமிழகத்தில் நாளை இந்த இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! எங்கெல்லாம் ரெட் அலெர்ட்?

தமிழகத்தில் நாளை (டிச.-1) 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட்-அலெர்ட் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

TN Alerts

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘ஃபெஞ்சல்’ புயலானது இன்று (நவ.-30) மாலை 5.30 மணி முதல் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளது எனவும் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் இது முழுவதுமாக கரையைக் கடந்து விடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேலும், புயலின் தீவிரத்தால் நாளை 3 மாவட்டங்கள் ரெட் அலெர்ட்டும், 14 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னைக்கு அதி கனமழை பெய்யும் என தெரிவித்த நிலையில் புயல் கரையைக் கடக்க தொடங்கிய போது கனமழைக்கான எச்சரிக்கையை திரும்ப பெற்றனர்.

நாளை ரெட் அலெர்ட் மாவட்டங்கள் :

  • விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமுதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் கொடுத்துள்ளனர்.

நாளை ஆரஞ்சு அலெர்ட் மாவட்டங்கள் :

  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மஞ்சள் அலெர்ட் மாவட்டங்கள் :

  • வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்