“டிசம்பர் 2-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்
வருகின்ற டிசம்பர் 2ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாவதில் தாமதமாகும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற 36 மணி நேரமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் கேரளாவில் டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.