கனமழை எதிரொலி: கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்: கனமழை எதிரொலியால் முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை (டிச.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜல் புயல் எதிரொலியால், கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதால், பல்வேறு பள்ளி கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்னர்.
மேலும், தொடர் மழையால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.