சென்னை கனமழை : எந்தெந்த சுரங்கபாதைகள் மூடல்.? முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்.,
கனமழை காரணமாக சென்னையில் பெரம்பூர் ரயில்வே, வில்லிவாக்கம், சூரப்பட்டு, ரங்கராஜபுரம், மேட்லி, கெங்குரெட்டி ஆகிய சுரங்கபாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில், சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் சேவை , விமான சேவைகள், பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் முக்கிய பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தற்போது சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள் (வடக்கு – மேற்கு) :
பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், சூரப்பட்டு அண்டர் பாஸ்.
மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள் (தெற்கு – கிழக்கு) :
ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கபாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை
போக்குவரத்து மாற்றம் :
- மேட்லி சுரங்கப்பாதை – கண்ணம்மாபேட்டை – முத்துரங்கன் சாலை – 17 அடி சாலை – அரங்கநாதர் சுரங்கப்பாதை நோக்கி வரும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
- பெரம்பூர் சுரங்கப்பாதை – வடக்கு முரசொலி மாறன் பாலம் மூடப்பட்டுள்ளது.
- சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் – தெற்கு வள்ளுவர் கோட்டம் சந்திப்பிலிருந்து நாகாஸ் நோக்கி வரும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லூரிக்கு திருப்பி விடப்படுகின்றன.
- பெரியார் பாதையில் இருந்து நெற்குன்றம் பாதை – தெற்கு வடபழனி – வடபழனியில் இருந்து வரும் வாகனம் திரும்பிவிடப்பட்டது. வெளியே செல்லும் வாகனம் கோயம்பேடு நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.
சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன.
மாற்றுவழிப்பாதைகள் :
ஐஸ் ஹவுஸிலிருந்து GRH சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேனி ஹை ரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி. ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேலும் மோட்டார் சைக்கிள்கள் திசைதிருப்பப்படாமல் தங்கள் வழியில் செல்லாம். GRH சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.