தமிழ்கத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
புல் புல் புயலானது தற்போது அதிதீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருப்பதால் மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் மற்கும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாளைக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனை அடுத்து ராமநாதபுரம்,நெல்லை,தேனி,மதுரை, சேலம், நீலகிரி, தருமபுரி,கோவை, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.