கனமழை எதிரொலி: எங்கெங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
சென்னை: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
இதன் காரணமாக, இன்று (டிச,13) மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், 16ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும், 17ஆம் தேதி 3 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி , தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருநெல்வேலி, புதுக்கோட்டை, மதுரை, மயிலாடுதுறை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், தேனி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், தர்மபுரி, நாமக்கல், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நேற்றைய தினம் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், நேற்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.