கனமழை எதிரொலி: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவிவருவதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
அதன்படி, திருவாரூர், சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய இடைவிடாது மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, 12 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, அரியலூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும், நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையிலும், கனமழையால் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்றைய தினமே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.