இந்த தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மார்ச் 2, 3ம் தேதி தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் கனமழை.
தென் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மார்ச் 2, 3ம் தேதி தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மார்ச் 2-ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களிலும் மார்ச் 2-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், மார்ச் 2, 3ம் தேதி தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.