புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம், தெற்கு ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நடப்பாண்டு 29-ஆம் தேதி பருவமழை தொடங்கி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
29-ஆம் தேதி முதல் நாளை வரைக்கும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மறுபக்கம் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…