தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்..!!
டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாகவும் உருவாகியுள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தே தீவிர புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் குஜராத்தில் அருகே கரையை கடக்கவுள்ளது. டவ்-தே புயல் காரணமாக மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிள் கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் மே 20ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.